Jan 28, 2025 - 04:17 PM -
0
SLIIT ICAC 2024 மூலம் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு’ வழிவகுக்கின்றது ‘செயற்கை நுண்ணறிவின் வலுவான எதிர்காலத்திற்காக வானவரம்பை இணைத்தல்’ என்ற தொனிப்பொருளில் SLIIT இன் கணினிப் பீடத்தினால் ‘06வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கணினி முன்னேற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு (ICAC 2024)2024 டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. கணினித் துறையின் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்களுக்காக 120 ற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்களை இணைக்கும் தளமாத இந்த மாநாடு அமைந்தது.
2019ஆம் ஆண்டு மாநாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக இம்மாநாடு நடத்தப்பட்டது. கணினித் துறை பற்றிய அறிவு, தகவல்தொழில்நுட்பத்தின் போக்கு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களைப் பரப்புவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். இந்த மாநாடானது, செயலமர்வுகள், மூன்று முக்கிய நபர்களின் பிரதான உரைகள் மற்றும் 20ற்கும் அதிகமான தொழில்நுட்ப அமர்வுகள் போன்றவற்றை உள்ளடக்கிய மாபெரும் மாநாடாக அமைந்தது.
Scopus தரப்படுத்தலில் 14 தரப்படுத்தலைக் கொண்ட ICAC மாநாடானது அதிநவீன பத்து கணினி பிரிவுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் 299 ஆய்வுக் கட்டுரைகளை ஈர்த்திருந்தது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் கடுமையான மதிப்பாய்வு நடைமுறைக்குப் பின்னர் 160 அனுபவம் வாய்ந்த மதிப்பாய்வாளர்களால் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மாநாட்டுக் குழு 99 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்காகத் தெரிவுசெய்தது.
கௌரவமான சிறப்புப் பேச்சாளர்களாக நியூசிலாந்தின் ஒக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வில்லியம் வொங், அவுஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.ரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நலின் ஆரச்சிலாகே மற்றும் அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி நிக்சன் கெரி உள்ளிட்டோர் கல்துகொண்டனர். SLIIT இன் கணினி பீடத்தின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கோட்டகொட குறிப்பிடுகையில், “செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி தொடர்பில் முன்னணியான ஆராய்ச்சிக்கு SLIIT அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை ICAC 2024 பறைசாற்றுகின்றது. 120 ஆய்வாளர்களை ஒன்றிணைத்து, குறிப்பிடத்தக்க 99 ஆய்வுக் கட்டுரைகளை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கச் செய்திருப்பதுடன், தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கான புதுமையை இதன் ஊடாக ஏற்படுத்த முடிந்துள்ளது” என்றார்.
மேம்படுத்தப்பட்ட படைப்பாற்றல் செயற்கை நுண்ணறிவு, மற்றும் விளக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு, தானியங்கி நுண்ணறிவு இயந்திரங்கள் மற்றும் அமைப்புக்கள், விவசாய தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள், கணினி நோக்கம் மற்றும் இயற்கை மொழி செயலாக்கம், நிலைபேறான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு, பாதுகாப்பான டிஜிட்டல் கட்டமைப்பு, கல்வியியல் தொழில்நுட்பம் மற்றும் தரமா வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட ஈடுபாடு நிறைந்த வடிவமைப்புக்கள் என 10 தடங்களை மாநாடு வெளிப்படுத்தியது.
SLIIT இன் கணினி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதீப் அபேவர்தன தெரிவிக்கையில், “வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கணினியின் நடைமுறை பயன்பாடுகளை மேம்படுத்துவதில் SLIIT இன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், படைப்பாற்றல் செயற்கை நுண்ணறிவு, சகாதாரப் பராமரிப்பின் தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான அமைப்புகள் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பலமான சர்வதேச பங்குபற்றல் மற்றும் IEEE தொழில்நுட்ப அனுசரணை என்பன ICAC இற்கு உலகளாவிய ரீதியிலான அங்கீகாரத்தை அதிகரிக்கச் செய்கின்றது” என்றார்.
IEEE இன் இலங்கைக் கிளை மற்றும் IEEE கணினி சமூகத்திடமிருந்து தொழில்நுட்ப இணை அனுசரணை கிடைத்திருந்தததுடன், பிளட்டினம் பங்காளர்களாக இணைந்துகொண்ட Curtin University மற்றும் BPC Banking Technologies கோல்ட் அனுரணையாளர்களாக இணைந்துகொண்ட Deakin University மற்றும் வெண்கல பங்காளர்களாக இணைந்துகொண்ட Creative Software மற்றும் Peoples Leasing ஆகியவற்றிடமிருந்தும் ICAC 2024 2024 மாநாட்டுக்கு சிறந்த ஒத்துழைப்புக் கிடைத்தது.
2019ஆம் ஆண்டு ICAC மாநாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து திறன், தொழில்நுட்பத்தின் போக்கு மற்றும் கணினியில் புத்தாக்கம் என்பவற்றைப் பரப்புவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், தொழில்நுட்ப ஆய்வு மற்றும் உருவாக்கம் என்பவற்றில் SLIIT ஐ முன்னணியில் திகழச் செய்கின்றது.
சர்வதேச ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து புதுமையான தொழில்நுட்ப நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் ICAC 2024 மாநாடு இலங்கையை ஒரு உலகளாவிய கல்விக்கான கேந்திர நிலையமாக நிலைநிறுத்தியது. இந்த மாநாடு அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்கியதுடன், சர்வதேச ஆராய்ச்சியில் அதிநவீன தொழில்நுட்ப விவாதங்கள் மற்றும் அணுகலுக்கான வளர்ந்து வரும் இடமாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளது.