Jan 30, 2025 - 05:43 PM -
0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும், ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்தவீச்சில் பிரபாத் ஜெயசூரிய மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்நிலையில், இலங்கை அணியை விட அவுஸ்திரேலிய அணி 610 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.