Header Logo

பல்சுவை
காதலர் தினம் பெயருக்குள் மறைந்திருக்கும் வரலாறு!

Feb 14, 2025 - 11:02 AM -

0

காதலர் தினம் பெயருக்குள் மறைந்திருக்கும் வரலாறு!

காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடுகிறோம். இந்த நாளை 'வேலன்டைன்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம். இந்த பெயருக்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார், அவரது உயிர்த் தியாகம் இருக்கிறது. அவர் யார்?, அவரது தியாகம் எப்படிப்பட்டது என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்.

ரோம் நகரை இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய இராணுவ வீரர்கள் பலர் திருமணம் செய்ய தொடங்கியதால் குழந்தைகள் மீதும், மனைவி மீதும் அதிக அன்பு செலுத்தி வந்தனர். இதனால் இராணுவப் பணியில் அவர்களது கவனம் குறையத் தொடங்கியது.

இதை அறிந்த மன்னர், இனிமேல் இராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என உத்தரவிட்டார். இதனால் பலரும் அச்சப்பட்டனர். அந்த காலத்தில் தான் வேலன்டைன் எனும் பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவர் மன்னருக்கு தெரியாமல் காதலர்கள் பலருக்கு இரகசிய திருமணம் செய்து வைத்தார். இந்த செய்தியை அறிந்த மன்னர் அவரை சிறையில் அடைத்து மரணதண்டனை கொடுத்தார். அடித்தே கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.

ஆனால் அதற்கு பதிலாக அவரது தலையை வெட்டி கொலை செய்தனர். அவர் கொலை செய்யப்பட்ட நாள்தான் பிப்ரவரி 14. அதனால்தான் இந்த நாள் வேலன்டைன்ஸ் டே என அழைக்கப்பட்டது. இவ்வாறு மகிழ்ச்சியாய் கொண்டாடும் காதலர் தினத்துக்குள் ஒரு மனிதரின் உயிர்த் தியாகம் மறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title