Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா இணக்கம்

Mar 19, 2025 - 08:09 AM

30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா இணக்கம்
Mobitel Inner 1278

 ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் நடத்திய பேச்சில், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.


மூன்றாண்டுகளை கடந்தும் நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபராக பொறுப்பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.


சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில், அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
அது தொடர்பாக சில முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், இரண்டாம் கட்டமாக இரு நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான தொலைபேசி பேச்சுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.


இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன், டிரம்ப் நேற்று பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் நடந்த இருவரின் பேச்சு குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர்.


'இதன்முடிவில், அந்நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு அதிபர் புடின் ஒப்புக்கொண்டார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, முதல் கட்டமாக, உக்ரைனும் ரஷ்யாவும் இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் அமலாகும் என்று கூறப்படுகிறது.


MOST READ

காணொளி
Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

Mobitel 1278