உலகம்
மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து

Apr 1, 2025 - 03:39 PM -

0

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து

மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ் (Petronas) என்ற அரச எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாயில் இன்று (1) காலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 

திடீரென ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் சுமார் 500 மீற்றர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நூறு அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. 

இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று செலங்கோர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்த இடம் ஒரு குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ளதால், அருகிலுள்ள கம்புங் கோலா சுங்கை பாரு (Kampung Kuala Sungai Baru) கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்கு தீ பரவியது. இதனால், சில மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், இன்னும் இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்த சம்பவம், மலேசியாவில் ரமழான் கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்ததால், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05