உலகம்
ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Apr 4, 2025 - 07:48 AM -

0

ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.85 பாகை வடக்கு அட்சரேகையிலும், 32.05 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

Comments
0

MOST READ