Apr 4, 2025 - 11:51 AM -
0
அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ், தங்கத்தின் விலை தற்போதைய உச்சத்தில் இருந்து 38 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.
இது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
அவரது கணிப்பின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,080 அமெரிக்க டொலரில் இருந்து 1,820 அமெரிக்க டொலர் வரை சரியலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கணிப்பு தங்கத்தின் தேவை குறைவது, உற்பத்தி அதிகரிப்பது மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை மாறுவது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இது ஒரு கணிப்பு மட்டுமே என்பதால், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மற்றும் சந்தைப் போக்குகளைப் பொறுத்து முடிவுகள் மாறுபடலாம்.