Header Logo

செய்திகள்
தொழிலாளர்களுக்கான அத்தனை உரிமைகளையும் அரசாங்கம் நிச்சயம் வழங்கும்!

May 1, 2025 - 10:31 AM -

0

தொழிலாளர்களுக்கான அத்தனை உரிமைகளையும்  அரசாங்கம் நிச்சயம் வழங்கும்!

தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமாலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, 

'இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கும் - உலக மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அத்தனை தொழிலாளர் தோழர்களுக்கும் இந்நாளில் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

அன்று முதல் இன்று வரை எமது நாட்டில் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியவை. எனவே, உடலாலும், அறிவாலும் உழைக்கிற எவருக்கும் எந்த இடத்திலும் அநீதி இழைக்க இடமளியோம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை நாம் எடுப்போம். 

எமது நாட்டில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பை மட்டுமல்ல உயிரைக்கூட இந்நாட்டு மண்ணுக்காக உரமாக்கியுள்ளனர். எனவே, அம்மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை நிச்சயம் நாம் உருவாக்குவோம். தோட்டக் காணிகளை தொழிலாளர் தோழர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. 

அதேபோல எமது கடற்றொழில் தொழிலாளர் தோழர்களுக்கும் பல்வேறு விடயங்களை நாம் செய்து வருகின்றோம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் உழைப்பாளர்களுக்கு எவ்விதத்திலும் அநீதி நடக்காது' என்றுள்ளது என அமைச்சர் இராமாலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title