Header Logo

செய்திகள்
நிரம்பி வழியும் பிரதான நீர்த்தேக்கங்கள்

May 1, 2025 - 11:01 AM -

0

நிரம்பி வழியும் பிரதான நீர்த்தேக்கங்கள்

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களும், பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்கள் என மொத்தம் 24 நீர்த்தேக்கங்கள் இவ்வாறு நிரம்பி வழிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த பிரதான நீர்த்தேக்கங்களுக்கு மேலதிகமாக 16இற்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதாக சுட்டிக்காட்டிய நீர்பாசனத் திணைக்களம், தொடர்ந்து நீர் நிரம்பி வழிந்தாலும் நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்பு திறனில் 91 சதவீதத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title