Header Logo

செய்திகள்
தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே இ.தொ.கா செயற்பட்டுள்ளது

May 1, 2025 - 11:30 AM -

0

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே இ.தொ.கா செயற்பட்டுள்ளது

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வெற்றியை கொண்டாடும் முகமாக மே மாதம் 1 ஆம் திகதியை உலகத் தொழிலாளர்கள் நாளாக கொண்டாடுகிறோம். 

ஒரு நாட்டின் முதுகெலும்பு தொழிலாளர்கள் தான். பாட்டாளி வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளர்ச்சியடையும். இலங்கையில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளனர். காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் சுதந்திர இலங்கையிலும் கூட கடுமையான போராட்டங்கள் ஊடாகவே தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்ததுடன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களும் பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டன. 

அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளனர். அதே வழியில் இ.தொ.கா தொடர்ந்தும் பயணம் செய்யும். தொழிலாளர்களுக்காக எமது தொழிற்சங்க ரீதியான செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். 

தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்யும் அதேவேளை அவர்களின் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title