Header Logo

பல்சுவை
24 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணித ஆசிரியர்

Jun 24, 2025 - 10:58 AM -

0

24 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணித ஆசிரியர்

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் பள்ளியில் படிக்கும் 24 சிறுமிகளை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிய வந்து ஆசிரியரை கைது செய்தனர். இந்த சம்பவம் சிர்மௌர் மாவட்டத்தில் நடந்தது.

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பாடசாலையில் கணித ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டார். 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாகச் சென்று பாடசாலை அதிபர் காந்தா தேவியிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரை முதலமைச்சர் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பினார். அதே நேரத்தில், பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதை அறிந்த பெற்றோர்கள், பாடசாலைக்கு பெருமளவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title