Jun 28, 2025 - 06:16 PM -
0
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்துள்ளது.
ஆனால், இந்த முறை தாக்கியது ஈரான் அல்ல ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என்று செய்திகள் வெளியாகி, மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவுக்கு ஆதரவு தரும் ஏமன் தற்போது திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செலுத்திய ஏவுகணைகளையும் டிரோன்களையும் இடைமறித்து இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல்-ஈரான் போரின்போது, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்க சரக்கு மற்றும் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின.
இப்போது திடீரென இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.