Jun 29, 2025 - 05:36 PM -
0
பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.54 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
150 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.25 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,69.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக காலை 8.02 மணியவில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து காலை 11.21 மணியவில் ரிக்டர் 3.8 அளவில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.