Jul 20, 2025 - 07:15 PM -
0
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பயணிகள் உயரிழந்ததாகவும், 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட போது, நூற்றுக்கும் மேற்பட்ட பயணித்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடலில் குதித்தனர்.
தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு பெற்றோர் தெறித்து ஓடும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.
தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்த போது குறித்த கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது.