Jul 21, 2025 - 05:37 PM -
0
ஐந்து பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த துறைசாமி விஜின்ந் மற்றும் மணிவேல் சத்தியசீலன் ஆகியோருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், சுற்றி எறிதல் போட்டியில் முதலிடத்தையும், பரீதிவட்டம் விசுதல் போட்டியில் பங்கேற்று துறைசாமி விஜின் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 5,000 மீட்டர் வேகநடைப் போட்டியில் மணிவேல் சத்தியசீலன் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, நாட்டுக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இன்று (21) கொட்டகலை மலையக இந்து குருமார் ஒன்றியத்தால் அமோகமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இரு வீரர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில், மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சுரேஷ் சர்மா, மலையக பெண்கள் அமைப்பின் தலைவர் ஞானசௌந்தரி (அபி), கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--