Jul 23, 2025 - 03:16 PM -
0
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பயிலுனர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வும், D.P. Education நிறுவனத்தின் கணினி பிரிவு திறப்பு விழாவும் இன்று (23) சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி சிவபிரகாசம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் முகாமையாளர் கேப்ரியல், D.P. Education நிறுவனத்தின் முகாமையாளர், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர், W.D.G. அமில இந்திக்க, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, ரூ. 25 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்ட D.P. Education கணினிப் பிரிவை பிரதி அமைச்சர் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக 125 புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கு மின்சாரம், வாகனத் திருத்தம், மேசன் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--