Jul 23, 2025 - 04:11 PM -
0
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கலந்துரையாடல் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஊடகவியாளர்களை சந்தித்து கருத்து வௌியிடும் போது,
போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய ஜனாதிபதி புட்டினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன்.
உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யாதான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.