உலகம்
காசா மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதல் - 21 பேர் பலி

Jul 23, 2025 - 04:29 PM -

0

காசா மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதல் - 21 பேர் பலி

காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில், காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 21 பேர் பலியாகி உள்ளனர். இதில், வடமேற்கு காசாவில் நடந்த தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட ஒரே வீட்டில் இருந்த 12 பேர் பலியாகி உள்ளனர். காசாவின் வடக்கே தல் அல்-ஹவா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு மீது நடந்த தாக்குதலில், கர்ப்பிணி உள்பட 6 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். 

நாசர் பகுதியில் இருந்த கூடாரத்தின் மீது நடந்த 3ஆவது தாக்குதலில் குழந்தைகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி தெரிவித்து உள்ளது. ஷிபா வைத்தியசாலையும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இதுபற்றி இஸ்ரேல் இராணுவம் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை. 

கடந்த மே மாதத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் உயிரிழந்து உள்ளனர். போரால் காசாவில் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஞ்சம் ஏற்படும் ஆபத்தும் காணப்படுகிறது. 

100இற்கும் மேற்பட்ட மனித உரிமை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், காசாவுக்கு கூடுதல் உதவி தரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதுபற்றிய கடிதம் ஒன்றும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05