Jul 23, 2025 - 09:34 PM -
0
பங்களாதேஷின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள், டெல்லியில் திட்டமிட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின், அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள், டெல்லியில் இன்று (23) ஊடகவியலாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், டாக்காவில் பாடசாலை மீது போர்விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி, சுமார் 31 பேர் பலியாகினர். இதனால், உயிரிழந்தவர்களுக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக, இந்தப் ஊடகவியலாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்ட இடத்துக்கு வருகை தந்த பின்னரே வெளியானதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியானது கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவப் படைகளின் அட்டூழியங்கள் மற்றும் பங்களாதேஷில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து உரையாடுவதற்காக, பங்களாதேஷ் மனித உரிமை அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.