Jul 25, 2025 - 05:55 PM -
0
பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயாவில் (25) இன்று சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுவதாக வலான ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
--

