Jul 26, 2025 - 05:08 PM -
0
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நாடுகள் இடையே இடம்பெற்று வரும் மோதல் காரணமாக இதுவரை 32 பேர் உயிரிழந்தனர்.
இரு நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால், இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது.இந்த சூழலை தேசியவாதிகள் பெரிதுபடுத்தினர்.
இதனால், பதற்றம் இன்னும் அதிகரித்தது. இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோதி கொண்டனர்.
துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கம்போடிய ராணுவம் நீண்டதூர ராக்கெட்டுகளை கொண்டு பொதுமக்கள் மீது தாக்கியது என தாய்லாந்து குற்றச்சாட்டாக தெரிவித்தது.இந்த சம்பவத்தில் குடிமக்களில் 9 பேர் பலியானார்கள் என முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இரு தரப்பிலும் சேர்த்து, பலி எண்ணிக்கை மொத்தம் 32 ஆக உயர்ந்து உள்ளது.
இதுபற்றி கம்போடிய தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாலி சொசீட்டா கூறும்போது, குடிமக்களில் 7 பேர் மற்றும் வீரர்களில் 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதுதவிர, பொதுமக்களில் 50 பேர் மற்றும் வீரர்களில் 20 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதேபோன்று கம்போடியாவின் தாக்குதல்களில், தாய்லாந்தின் 29 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 30 பேர் காயமடைந்து உள்ளனர்.
தாய்லாந்துடனான வடக்கு எல்லையில் இருந்து 20 ஆயிரம் கம்போடிய மக்கள் புலம்பெயர்ந்து சென்றனர்.
தாய்லாந்தின் எல்லை பகுதிகளில் இருந்தும் 1.38 லட்சம் பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.