உலகம்
அமெரிக்காவில் 10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் - வௌியான எச்சரிக்கை

Jul 27, 2025 - 08:45 AM -

0

அமெரிக்காவில் 10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் - வௌியான எச்சரிக்கை

அமெரிக்காவில் 10 கோடி பேரை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் டெக்சாஸ், மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 

குறிப்பாக, வட கரோலினாவில் 113 டிகிரி,வொஷிங்டன் டி.சி.யில் 109 டிகிரி என வெயில் கொளுத்துகிறது. 

இதனை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்குள்ள மக்கள் திணறுகின்றனர். 

இதனால் சுமார் 10 கோடி பேரை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எதிர்வரும் 29ஆம் திகதி வரை இந்த வெயில் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05