மலையகம்
ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா!

Jul 28, 2025 - 05:36 PM -

0

ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) அவர்கள் நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 

இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, நுவரெலியா மாநகரசபையின் பிரதி மேயர் யோகராஜா, முன்னாள் அமைச்சர் புத்திர சிகாமணி ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

 

இச்சந்திப்பின் போது மலையக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி, எதிர்கால பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் என்பவற்றிற்கு ஜப்பான்  உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  இக்கோரிக்கையை ஏற்று சாதகமாக பரிசீலிப்பதாக  ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05