மலையகம்
'சிசு செரிய' பாடசாலை சேவை ஆரம்பம்

Jul 30, 2025 - 10:57 AM -

0

'சிசு செரிய' பாடசாலை சேவை ஆரம்பம்

டயகம, அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் மன்றாசி, நாகசேனை ஆகிய பிரதேச மாணவர்களில் நலன் கருதி 'சிசு செரிய' பஸ் சேவை  அக்கரப்பத்னை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

டயகம நகரத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தலவாக்கலை நகரத்தினை சென்றடையும். மாலை 2.10 மணிக்கு தலவாக்கலை நகரத்தில் இருந்து டயகம நோக்கி செல்லும். டயகம நகரத்தில் இருந்து தலவாக்கலை வரை 23 கிலோமீட்டர் தூரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய மாகாண போக்குவரத்து சேவை அதிகாரசபை வழங்கியுள்ளது.

 

அத்தோடு 23 பாடசாலை மாணவர்கள் இச்சேவையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

குறித்த பஸ் சேவைக்கான வரவேற்பு  நிகழ்வில் அக்கரப்பத்னை பிரதேச சபை தலைவர், உபதலைவர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நகர வர்த்தகர்கள் சமய தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

 

மேலும் இந்த சேவைத் தொடர்பில் நுவரெலியா மாவட்ட போக்குவரத்து சேவை பொருப்பதிகாரி ரொஷான் குமார கருத்து தெரிவிக்கையில்,

 

'சிசு செரிய' சேவை கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் அதிகளவில் முன்னெடுக்கப்படுகிறது.

அதனோடு ஒப்பிடுகையில் மத்திய மாகாணத்தில் குறைந்தளவிலான 30 'சிசு செரிய' பஸ் சேவை மாத்திரமே இடம்பெறுகிறது.

 

குறித்த சேவையானது கஷ்டப்பிரதேசத்தை சேர்ந்த வறுமையான நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி ஊக்குவிப்பு  நலன் கருதியே முனெடுக்கப்படுகிறது.

 

இந்த பஸ் சேவையில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் அத்தோடு பொது போக்குவரத்து கட்டணத்தில் அரைவாசி கட்டணத்தை செலுத்தி பயணிக்கலாம்.

 

எதிர்காலத்தில் மத்திய மாகாணத்தில் 100 'சிசு செரிய' பஸ் சேவை முன்னெடுப்பது, தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மத்திய மாகாண போக்குவரத்து சேவை அதிகாரசபை ஆலோசிக்கப்பட்டு வருவதோடு மேற்படி சேவை தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டு சிறந்த சேவையாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05