உலகம்
லண்டன் வான்வெளி மூடல்... இங்கிலாந்து விமானங்களை முடக்கிய தொழில்நுட்ப கோளாறு!

Jul 30, 2025 - 11:48 PM -

0

லண்டன் வான்வெளி மூடல்... இங்கிலாந்து விமானங்களை முடக்கிய தொழில்நுட்ப கோளாறு!

தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (30) மாலை இங்கிலாந்து தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டது. 

இந்தப் பிரச்சினையால் இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாகின அல்லது இரத்து செய்யப்பட்டன. 

தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்பட்டு லண்டன் பகுதியில் இயல்புநிலை செயல்பாடுகளை மீட்டெடுத்ததாக NATS பொறியாளர்கள் தெரிவித்தனர். 

இந்தப் பிரச்சினையால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக NATS தெரிவித்துள்ளது. 

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NATS மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இந்த சம்பவம் முக்கியமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது. 

தற்போதைய பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டாலும், முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05