உலகம்
பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு : அமெரிக்க ஜனாதிபதி அதிரடி

Jul 31, 2025 - 07:30 AM -

0

பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு : அமெரிக்க ஜனாதிபதி அதிரடி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்துள்ளார். 

அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமுல்படுத்தி உத்தரவிட்டார். 

இந்நிலையில், பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். 

இதுபற்றிய அந்த உத்தரவில், பிரேசில் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அமெரிக்க வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது. அமெரிக்க குடிமக்களின் சுதந்திர பேச்சுரிமையையும் அது பாதித்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவிக்கின்றது. 

இதனை தொடர்ந்து பிரேசிலுக்கு எதிராக மேலதிகமாக 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், பிரேசிலுக்கு ஏற்கனவே விதித்த 10 சதவீத வரியுடன் சேர்த்து, மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனினும், விமான பாகங்கள், அலுமினியம், உரம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன. அவர் நேற்று இதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட நிலையில், 7 நாட்களில் அது நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05