Jul 31, 2025 - 09:44 AM -
0
திருமணம் என வரும் போது நாம் அனைவரும் நம் பண்புகளுக்கு ஏற்ப மாறுபட்ட கண்ணோட்டங்கள், விருப்பங்களை கொண்டுள்ளோம். நம் வருகாலம் குறித்த எதிர்பார்ப்புகளும் நபருக்கு நபர் மாறுபடுகிறது. குறிப்பாக, இக்கால இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள் கணிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில், திருமணம் முடிக்காத இளம்பெண்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது, தனது வருங்கால வாழ்க்கை துணை தனது விருப்பம் போல் நடப்பாரா? தனது விருப்பங்களை பூர்த்தி செய்வாரா? தன் விருப்பங்களை பூர்த்தி செய்ய எந்த அளவுக்கு முயற்சிகளை எடுப்பார்? என்பது தான்.
தங்கள் வாழ்க்கை துணை தனது விருப்பங்களை பூர்த்தி செய்ய இந்த அளவுக்கு முயற்சி செய்வார் என ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவும் விதமாக இந்த பதிவில், எந்த ராசி ஆண்கள் தங்கள் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்வார்? தனது வாழ்க்கை துணையின் ஆசைகளை தனது கடமையாக மதிப்பார்? என்பது குறித்து சற்று விரிவாக காணலாம்.
கடகம்
தனது வாழ்க்கை துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் பேரார்வம் காட்டும் ராசியாக கடக ராசி பார்க்கப்படுகிறது. கடக ராசியில் பிறந்த ஆண்கள் அடிப்படையில் இறக்க குணம் கொண்டவர்கள், மற்றவர்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள்.
அந்த வகையில் தனது குடும்ப உறவுகளின் விருப்ப - வெறுப்புகளுக்கு மதிப்பு அளித்து, அவர்களின் விருப்பமான ஒரு நபராக குடும்பத்தில் இருப்பவர்கள். குறிப்பாக தனது வாழ்க்கை துணையின் விருப்பங்களை அவர் கூறாமல் புரிந்துக்கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் தங்கள் செயல் திட்டங்களை வகுக்க கூடியவர்களாகவும் இந்த கடக ராசி ஆண்கள் பார்க்கப்படுகின்றனர்.
தன் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்வதோடு, அவர் மீது அதீத பாசத்தை வெளிப்படுத்தி ஒரு சிறந்த கணவர் எனும் பெயரை இந்த கடக ராசியினர் எடுக்கின்றனர்.
ரிஷபம்
கடக ராசி ஆண்களுக்கு அடுத்தப்படியாக தனது மனைவி மீது அதீத பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு ராசியாக ரிஷப ராசி ஆண்கள் பார்க்கப்படுகின்றனர். ரிஷப ராசி ஆண்கள் அடிப்படையில் உறுதியானவர்கள், சவால்களை எதிர்த்து போராடக்கூடிவயர்கள், பண்பானவர்கள், மற்றவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள்.
ரிஷப ராசி ஆண்களிடம் இயல்பாக காணப்படும் பண்புகள், இணக்கமான ஒரு குடும்ப வாழ்க்கையை கட்டமைக்க உதவி செய்கிறது. உறவில் நிலைத்தன்மை உறுதி செய்யும் இந்த ரிஷப ராசி ஆண்கள், தங்கள் மனைவிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்ய தயக்கம் காட்டுவது கிடையாது.
தனது வாழ்க்கை துணையின் லட்சியங்களை தனது லட்சியமாக ஏற்று, வெற்றிகரமாக செய்து முடிக்கும் குணம் இவர்களிடம் காணப்படுகிறது. ரிஷப ராசி ஆண்கள் தன் மனைவியின் விருப்பங்களை பூர்த்தி செய்வதோடு மட்டும் அல்ல, வாழ்க்கை துணையின் மீது அளவுகடந்த அன்பு, அக்கறை செலுத்தும் ஒரு நபராகவும் பார்க்கப்படுகிறார்.
மகரம்
மகர ராசி ஆண்கள் பொறுப்பானவர்கள், தங்கள் கடமைகளை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர்கள். தனது பொறுப்பு உணர்ந்து, குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைக்க கூடியவர்கள். தொழில் வாழ்க்கையில் பேரார்வம் காட்டும் இந்த மகர ராசி ஆண்கள், தொழிலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் அளித்து குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே ஒரு ஆரோக்கியமான சமநிலையை உண்டாக்குகின்றனர்.
குறிப்பாக, தனது வாழ்க்கை துணையின் விருப்பங்களை தனது விருப்பமாக மாற்றி செயல்படும் பண்பு இவர்களிடம் காணப்படுகிறது. நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தும் சிந்தனைகளும், செயல்பாடுகளும் இவர்களை ஒரு சிறந்த கணவராக மாற்றுகிறது.
துலாம் ராசி
சுக்கிரனை ஆளும் கிரகமாக கொண்ட துலாம் ராசி ஆண்கள், சுக்கிரன் கிரகத்தின் குணாதிசயங்களுடன் இயல்பாகவே காதல் வாழ்க்கையில் சிறந்து விளங்க கூடியவர்கள். சிறந்த காதலர் எனும் பெயர் எடுக்கும் இந்த துலாம் ராசி ஆண்கள், தங்கள் வாழ்க்கை துணையின் ஆசைகள், விருப்பங்களை நிறைவேற்றுவதில் பேரார்வம் கொண்டுள்ளனர்.
தனது மனைவியின் விருப்பங்களை பூர்த்தி செய்வதை, தனது காதலை வெளிப்படுத்துவதின் அடையாளமாக பார்க்கும் இந்த துலாம் ராசி ஆண்கள், தனது மனைவியின் காதல் விருப்பங்களை நிறைவேற்ற எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர். இந்த முயற்சியில் எவ்வளவு பெரிய சவால் வந்தாலும், அதனை விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு அதில் வெற்றி காணும் மன உறுதி இவர்களிடம் காணப்படுகிறது.
சிம்மம்
உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராசியாக சிம்ம ராசி பார்க்கப்படுகிறது. தன்னை சார்ந்துள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் சிம்ம ராசியினருக்கு நிகர் சிம்ம ராசி மட்டும் தான். அந்த வகையில் தனது காதல் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றும் சிறந்த கணவர்களாக இந்த சிம்ம ராசி ஆண்கள் பார்க்கபடுகின்றனர்.
தன்னுடன் தனது வாழ்க்கை பயணத்தில் பயணிக்கும் பெண்களுக்கு கௌரவமான இடத்தை அளிக்கும் சிம்ம ராசி ஆண்கள், தன் மனைவிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க விரும்புகின்றனர். மேலும், அவரது விருப்பங்களை தானே புரிந்து, சிறப்பாக செய்து முடிக்கும் பண்பும் இவர்களிடம் காணப்படுகிறது.
தனது மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவது மட்டும் அல்லாமல், அவரது குடும்ப உறவுகளை தனது சொந்த குடும்பமாக ஏற்கும் பண்பு கொண்ட இந்த சிம்ம ராசி ஆண்கள், அனைவருக்கும் பிடித்த ஒரு நபராக மாறுகின்றனர். அந்த வகையில் சிறந்த ஒரு கணவராக இந்த சிம்ம ராசி ஆண்கள் பெயர் மற்றும் புகழ் பெறுகின்றனர்.