Aug 1, 2025 - 04:47 PM -
0
கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இந்தப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் ஜோதிகா, பிரபு, நயன்தாரா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆன இந்த படத்தில், சந்திரமுகியாக மிரட்டிய ஜோதிகாவின் நடிப்புக்கு அதிகம் வரவேற்பு கிடைத்தது.
எனினும், இப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு முதலில் சிம்ரன் தான் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் சில காரணங்களால் சந்திரமுகி படத்தில் இருந்து விலகினார்.
அதன்பிறகு அந்த கதாப்பாத்திரத்திற்காக ஜோதிகா தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஜோதிகா இந்த கேரக்டரில் நடிப்பாரா என்ற கேள்வி ரஜினி உள்ளிட்ட பலருக்கும் ஏற்பட்டிருந்த போதிலும் ஜோதிகா தமது சிறந்த நடிப்பின் மூலம் அதற்கான பதிலை வழங்கினார்.
எனவே ஜோதிகாவிற்கு இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமான சிம்ரனுக்கு. ரசிகர்கள் தமது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.