Aug 1, 2025 - 05:50 PM -
0
இசை நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இசைப்புயல் ஏர்.ஆர் ரஹ்மான் அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
அவரது இசை நிகழ்வானது அமெரிக்காவின் 15க்கும் மேற்பட்ட நகரங்களில் இடம்பெற்று வருகின்றது.
ஏ.ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் பல பிரபலங்களை சந்தித்து கலந்துரையாடி வரும் நிலையில், அங்கு மூத்த பின்னணிப் பாடகரான கே.ஜே.யேசுதாஸை சந்தித்தமை குறித்து சமூக வலைத்தளப் பதிவில் வௌியிட்டுள்ளார்.
என் குழந்தைப் பருவத்தின் பேவரைட்டான யேசுதாஸ் அவர்களை டல்லாஸில் அவரின் இடத்தில் சந்தித்தேன்.
அவரது ஆராய்ச்சிப் பணியும், இந்திய பாரம்பரிய இசை மீதான அன்பும் ஆச்சரியமளித்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த பாடகரான கே.ஜே.யேசுதாஸ், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி இந்திய மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ஒரே நாளில் வெவ்வேறு மொழிகளில் 16 புதிய பாடல்களைப் பாடி பதிவு செய்ததற்காக உலக சாதனையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.