Aug 2, 2025 - 10:43 AM -
0
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் என்பன இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.
இதற்கான நிகழ்வானது சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாகிர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிறப்பு வேடத்தில் அமீர்கானும் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள கூலி திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சாரில் ‛ஏ' சான்றிதழ் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக ரஜினி படங்களுக்கு அவரது ரசிகர்கள் தாண்டி குடும்ப ரசிகர்களும் அதிகம் வருவார்கள்.
அப்படி இருக்கையில் இந்த படத்திற்கு ‛ஏ' சான்று கிடைத்திருப்பது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் நிறைய ஆக் ஷன் மற்றும் ரத்தக் காட்சிகள் உள்ளதால் இவ்வாறு ஏ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன.
பொதுவாகவே லோகேஷ் படங்களில் ஆக் ஷன் பிரதானமாக இருக்கும்.
ஆனால் இந்த படத்தில் அது கூடுதலாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்று தருவதாக தணிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.
எனினும் லோகேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் அதனை மறுத்துவிட்டதாம்.
இதன் காரணமாக படத்தை ஏ சான்றுடனேயே வெளியிட முடிவெடுத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.