Header Logo

சினிமா
கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது

Aug 2, 2025 - 05:15 PM -

0

கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது

71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டில்லியில் அறிவிக்கப்பட்டது. 

திரைப்படங்கள் அல்லாத இதர விருதுகளில் 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. 

அப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரவணமருது சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் இந்த விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

இதில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சரவணமருது சவுந்தரபாண்டி, தற்போது உயிருடன் இல்லை. 

2023இல் தனது மனைவியுடன் அவர் தகாத உறவில் இருந்ததாக சக்திவேல் என்பவர் அவரது மாமனார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து சரவண மருதுவைக் கொலை செய்து அவரது உடலை கீரனூர் கண்மாய் பகுதியில் புதைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

2023 ஒக்டோபர் 14ஆம் திகதி வீட்டை விட்டுச் சென்ற சரவண மருதுவைக் காணவில்லை என அவரது சகோதரி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து சந்தேகநபர்களை கைது செய்தனர். 

உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம் 'லிட்டில் விங்ஸ்'. 

கந்தர்வனின் 'சனிப்பிணம்' என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், மறைவுக்குப் பிறகு சரவணமருது சவுந்தரபாண்டி சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title