Aug 3, 2025 - 01:12 PM -
0
கம்பளை கலஹா பிரதேசத்தில் கடுமையான மழை காரணமாக நிலம்பை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு இன்று (03) திறக்கப்பட்டது.
நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்து, தண்ணீர் நிரம்பியதால், வான் கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.
கம்பளை, கலஹா, தெல்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
--