Aug 3, 2025 - 01:46 PM -
0
நுவரெலியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இன்று (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையால் இந்த வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வீதியைக் கடந்து செல்வதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரதேச மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்வோரும் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருப்பதால், அடிக்கடி வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
--