Aug 3, 2025 - 03:46 PM -
0
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தின் அசோகவனம் அனு ஸ்ரீ தியானசாலை மண்டப திறப்பு விழா, ஆலயத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, அனு ஸ்ரீ ஜெய்குப்தா குடும்பத்தினர், பிரதி கல்வி அமைச்சர் மதுர சேனவிரத்ன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இணைந்து நாடாவை வெட்டி புதிய மண்டபத்தைத் திறந்து வைத்தனர். இதேவேளை, பிரதம அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
--