Aug 5, 2025 - 12:47 PM -
0
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துல்முல்ல பிரதேசத்தில் நேற்று (04) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கித்துல்முல்ல பகுதியில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் நேற்று இரவு சுமார் 1 மணியளவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், மின்சாரத்தை துண்டித்த பின்னர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கலஹா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--