Aug 8, 2025 - 10:14 AM -
0
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில், கடந்த வாரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டத்தால் வளர்ப்பு நாய்கள் தாக்கப்படும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.
அதன்படி, லிந்துளை கெல்சி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தைப் புலி கவ்விச் செல்லும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மலையகப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--