Header Logo

பல்சுவை
இறந்த குட்டியை பிரிய மறுத்த தாய் டொல்பின்

Aug 17, 2025 - 12:08 PM -

0

இறந்த குட்டியை பிரிய மறுத்த தாய் டொல்பின்

அபுதாபி - அல் தப்ராவின் வடக்கு பகுதியில் சலாகா தீவில் இறந்த குட்டியை பிரிய மறுத்த தாய் டொல்பின் தொடர்பில் தகவல் ஒன்று வௌியாகியுள்ளது. 

இந்த தீவு பகுதியில் உள்ள கடலில் டொல்பின்கள் அதிகளவில் உள்ளன. சமீபத்தில் பெண் டால்பின் குட்டி ஒன்றை ஈன்றது. இந்த குட்டி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. 

இதனால் அந்த தாய் டொல்பின் மிகவும் சோகமடைந்தது. எனினும் என்ன காரணத்துக்காக குட்டி உயிரிழந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. 

அபுதாபி சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

குட்டி உயிரிழந்த நிலையில், தாய் டொல்பின் அதனை பிரிய மனம் இல்லாமல் தவிக்கும் காணொளியே இதுவாகும். 

அபுதாபி கடல் பகுதியில் அதிகமான டால்பின்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் கடல் பகுதியில் செல்லும் போது பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை வீசிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இறந்த குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் டொல்பின் அதனை சுற்றி, சுற்றி வந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அந்த காட்சியை அவர்கள் படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். 

இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் உயிரிழந்த குட்டியை விட்டு பிரிய முடியாமல் தவித்த தாய் டொல்பினின் பாசப் போராட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title