Aug 21, 2025 - 01:06 PM -
0
காசாவில் உடனடியாக போரை நிறுத்துவதற்கும், அங்கு அமைதியை நிலை நாட்டுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
கடலோரப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பாடசாலை செல்ல முடியாமல் 3வது ஆண்டையும் எதிர்கொள்வதாக அந்த நிறுவனம் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
காசா சிறுவர்கள் கற்பதற்கு பதிலாக தண்ணீர் மற்றும் உணவைத் தேடி தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
“குழந்தைகளுக்கு இப்போது அவசரமாக ஒரு போர் நிறுத்தம் தேவை, அதனால் மீண்டும் கற்றலுக்குச் சென்று பிள்ளைப் பருவத்தில் எஞ்சியிருப்பதை அவர்களால் மீண்டும் அடைய முடியும்.” என வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இதுவரையான காலப்பகுதியில் காசாவில் சுமார் 88 சதவீத பாடசாலை கட்டிடங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.