உலகம்
சீன ஜனாதிபதி திபெத்திற்கு விஜயம்

Aug 21, 2025 - 01:41 PM -

0

சீன ஜனாதிபதி திபெத்திற்கு விஜயம்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் திபெத்துக்கான அரிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

நீண்டகாலமாகப் போட்டி நிறைந்த இமாலயப் பகுதியில் சீன ஆட்சி ஒருங்கிணைக்கப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீன அதிபரின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

திபெத்தின் பிராந்திய தலைநகரான லசாவுக்கு சென்ற அவர் அங்கு "அனைத்து இனக்குழுக்கள் மற்றும் அனைத்து தரப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. 

லசாவில், வளமான, நாகரிகமான, இணக்கமான மற்றும் அழகான" ஒரு நவீன சோசலிச திபெத்தை கட்டியெழுப்ப சீன ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார். 

"சோசலிச சமூகத்திற்கு ஏற்ப திபெத்திய பௌத்தத்தை வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் தௌிவுபடுத்தியதாக கூறப்படுகின்றது. 

1951 இல் கம்யூனிஸ்ட் படைகள் திபெத்தை ஆக்கிரமித்தன, 1965 இல், சீனத் தலைவர் மாவோ சேதுங்கின் ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தால் திபெத் தன்னாட்சிப் பகுதியை நிறுவியது.

Comments
0

MOST READ
01
02
03
04
05