பல்சுவை
900 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டிலிருந்து உருவாக்கப்பட்ட பெண் முகம்

Sep 17, 2025 - 02:25 PM -

0

900 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டிலிருந்து உருவாக்கப்பட்ட பெண் முகம்

இங்கிலாந்தில் வெள்ள மேலாண்மை பணியின் போது தோண்டியெடுக்கப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து விஞ்ஞானிகள் அவரது முகத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர். 

2022 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் நிறுவனம் (EA) வெள்ள மேலாண்மை திட்டத்தில் பணிகளைத் தொடங்கியபோது, ​​கும்ப்ரியாவின் கெண்டலில் உள்ள ஹோலி டிரினிட்டி கெண்டல் பெரிஷ் தேவாலயத்தில் புதைக்கப்பட்ட நிலையில் 14 உடல்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெண் இப்படி இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் படத்தை மீண்டும் உருவாக்கினர். 

இது தற்போது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேவாலயத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகளாக தேவாலய முற்றத்தின் சுவருக்கு அடியில் இருந்ததால் நசுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெண்ணின் மண்டை ஓடு மறுகட்டமைப்பை உருவாக்க போதுமான நிலையில் இருந்துள்ளது. 

அந்தக் குழு தற்காலிகமாக அவளுக்கு கெண்டல் பெண் என்று பெயரிட்டுள்ளது. 

எனினும் அதனை பார்வையிட வரும் பொதுமக்களிடம் மீண்டும் முகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு பெயர் ஒன்றை சூட்டுமாறு கோரப்பட்டுள்ளது. 

"நாம் கண்டுபிடிக்கும் ஒரு உடலுக்குப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு நுட்பங்கள் உள்ளன. 

பெண் ஒருவரை மீண்டும் உருவாக்குவது எமக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டமாகும். 

அவர் ஓரளவுக்கு அப்படியே இருக்கிறார் என நினைக்கிறோம். சிரேஷ்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் டீன் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05