Oct 10, 2025 - 05:16 PM -
0
சிவகார்த்திகேயனுன் புதிய படத்தில் பிரபல நடிகை மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மற்றொரு நடிகை விலகியதால் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்து வந்த மதராஸி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது மதராஸி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலா சிவகார்த்திகேயன் நடிக்கும் இன்னொரு படத்திலும் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முன்னதாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்த நிலையில், சில காரணங்களுக்காக ராஷ்மிகா விலகியுள்ளாராம்.
இதனால் பராசக்தி படத்திற்கு பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீலீலா இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.