Oct 12, 2025 - 10:28 AM -
0
தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்த இட்லி கடை படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், கீதா கைலாசம், பார்த்திபன், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்த்து வருகிறோம். கடந்த 1 ஆம் திகதி திரைக்கு வந்த இட்லி கடை படத்தின் வசூல் குறித்தும் முதல் நாளில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 11 நாட்களாக மக்களின் ஆதரவை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இட்லி கடை படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 66 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் கிடைத்துள்ளது. இதன்மூலம் இட்லி கடை படத்திற்கு தமிழகத்தில் அதீத வரவேற்பு கிடைத்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.