Oct 13, 2025 - 10:25 AM -
0
2025 ஆம் ஆண்டு பிரம்மாண்ட பான் இந்தியன் திரைப்படமாக காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இவருடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
இந்த நிலையில், 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 11 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 1000 கோடியை இப்படம் தொடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.