சினிமா
முருகதாஸை தாக்கி பேசிய சல்மான் கான்

Oct 13, 2025 - 12:20 PM -

0

முருகதாஸை தாக்கி பேசிய சல்மான் கான்

சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் மதராஸி. சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் இணைந்து நடித்திருந்த இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். 

இப்படத்திற்கு முன் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம்தான் சிக்கந்தர். சல்மான் கான் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, சல்மான் கான் படப்பிடிப்புக்கு வருவது லேட் என்கிற குற்றச்சாட்டை முருகதாஸ் கூறியிருந்தார். 

இந்த நிலையில், பிக் பாஸ் 19 ஆவது சீசனை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், இதுகுறித்து பிக் பாஸ் மேடையில் பேசியுள்ளார். 

"சிக்கந்தர் படப்பிடிப்பிற்கு நான் லேட் ஆக வந்ததால்தான் அப்படம் தோல்வியடைந்துவிட்டது. மதராஸி பட ஹீரோ காலை 6 மணிக்கு வந்துவிடுவார், அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகிவிட்டது" என மதராஸி பிளாப் என்கிற விதத்தில் கிண்டல் செய்யும் வகையில் முருகதாஸ் தாக்கி பேசியிருந்தார் சல்மான் கான். 

இது தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய நடிகர் இப்படி பேசலாமா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05