சினிமா
பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

Oct 14, 2025 - 07:15 PM -

0

பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8. இந்த பிக்பாஸ் 8 சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரனும் சௌந்தர்யா 2 ஆவது இடம் பிடித்தார். 

இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், மோசடி கும்பல் ஒன்று சௌந்தர்யாவை மிரட்டி பணத்தை பறித்துள்ளது. இது தொடர்பாக அவரது இன்ஸ்டா தளத்தில் விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

அதாவது, பெட்எக்ஸ் (FedEx) கொரியர் பெயரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டதாகக் கூறி அவரை மிரட்டியுள்ளார். 

பின்னர், போலி ஆவணங்களை அவரது தொலைப்பேசிக்கு அனுப்பி டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளனர்.

 

வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப சொல்லி மிரட்டி அவரிடம் இருந்து ரூபா 17.5 லட்சம் பணத்தைப் பறித்துள்ளனர். 

இது தொடர்பாக பொலிஸிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், ஒரு வருடம் ஆகியும் பணத்தை மீட்க முடியவில்லை என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05