Header Logo

சினிமா
விஜயின் ஜனநாயகன் படக்கதை தெரியுமா..? லைன் பை லைன் கசிந்த ரகசியம்..!

Oct 16, 2025 - 04:56 PM -

0

விஜயின் ஜனநாயகன் படக்கதை தெரியுமா..? லைன் பை லைன் கசிந்த ரகசியம்..!

தனது மனைவி இந்திரா ஐ.ஏ.எஸ். காவல்துறையில் தனது முன்னாள் சகாக்களின் உதவியுடன் தனது எதிரிகளை வீழ்த்த தனது அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார். முதல்வராகி மக்களுக்கு சேவை செய்கிறார். இந்தப்படத்தின் கதைதான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் என்கிறார்கள். 

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகும் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம் ஜனநாயகன். விஜயின் 69வது படமான ஜனநாயகன் அவரது கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. காரணம் அவரது அரசியல் வருகை. 

போலீஸ் கேரக்டரில் வரும் அதன் பின்னர் அரசியல்வாதி, முதல்வராவதுதான் கதை என்று கூறப்படுகிறது. 2026 ஜனவரி 9-ம் திகதி பொங்கல் பண்டிகைக்கு முன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள். 

விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பதாலும், ஜனநாயகன் என பெயரிட்டு இருப்பதாலும் இப்படத்தின் கதை என்ன என்பது பலத்த எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது. 

இந்நிலையில், 1997ம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி நடித்த ஜனாதிபதியம் கதை தான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்கிறார்கள். 

ஜனாதிபதியம் ஒரு அரசியல் சட்டையர் பாணியில் உருவாக்கப்பட்டது. மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிதிருந்தார். 

கதை, ஒரு சாதாரண மனிதனை மையமாக வைத்து, அவன் எப்படி அரசியல், சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுகிறான் என்பதைப் பற்றியது. 

இந்தப் படம், அரசியல் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

சுரேஷ் கோபி ஒரு நேர்மையான, தைரியமான காவல்துறை அதிகாரியாக வாழ்ந்து, மக்களுக்காக போராடும் ஒரு தலைவனாக உருவெடுப்பார். மக்களின் ஆதரவுடன் ஒரு மாற்றத்தை உருவாக்க முயன்று முதல்வர் பதவியை அடைவதுதான் கதை.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title