Nov 21, 2025 - 07:18 AM -
0
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையானது வரும் 10-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டொக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறினால் பாரியளவான அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் சிறுவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.
அதில், தங்களது தரவுகளை பதிவிறக்கம் செய்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரட்ஸ் தளங்களில் இருந்து வெளியேறுமாறு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக எச்சரித்துள்ளது.

