Nov 26, 2025 - 04:33 PM -
0
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்ததுள்ளது.
அதேசமயம் சொந்த மண்ணில் இந்திய அணி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு கம்பீர் கூறியதாவது:-
இதை முடிவு செய்ய வேண்டியது பிசிசிஐ தான். நான் முன்பே சொன்னேன். இந்திய கிரிக்கெட் முக்கியம். நான் முக்கியமில்லை. இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் நன்றாக விளையாடியபோதும், சம்பியன்ஸ் டிராபி, ஆசிய கிண்ணத்தை வென்றபோது இதே கம்பீர்தான் பயிற்சியாளராக இருந்தேன். இது கற்றுக்கொண்டிருக்கும் ஒரு அணி என கூறியுள்ளார்.

