கிழக்கு
திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படை நிவாரணக் கப்பல்!

Dec 1, 2025 - 06:18 PM -

0

திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படை நிவாரணக் கப்பல்!

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல், திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்குவதற்கான 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று (01) காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது. 

இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர, கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர். 

இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கேப்டன் முகுந், இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார். 

"சமுத்திரத்தில் தோழமை" (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள்,மருந்து பொருட்கள், குடிநீர், படுக்கை விரிப்புக்கள், சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இவ் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05