Dec 4, 2025 - 06:02 PM -
0
இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஏஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி துடுப்பாடி வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
இந்நிலையில் இன்று அவுஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் அவுஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ஏஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெத்யூ ஹெய்டன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹெய்டன் தப்பித்தார்.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

